இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்!

Date:

நாட்டில் நிலவும் சுகாதார நிலைமைகளுக்கு அமைய தமது திணைக்களத்தினூடாக சேவைகளை வழங்கும் முறை குறித்து, இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

 

சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை, ஒன்லைன் மற்றும் மின்னஞ்சல் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள முடியும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

 

சான்றிதழ் தேவைக்கு அமைவாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிக்கு அல்லது துரித தபால் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணத்தாரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

இலங்கை கல்வித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு னுழுநு ஊடாகவும் சான்றிதழ்களை கோரி விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் .

 

2001 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னரான க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை பேறுபேற்று சான்றிதழ்களைப் பெறுவதற்காக 011 278 8137 என்று தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

அத்துடன், 2001ஆம் ஆண்டுக்கு முன்னரான க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை சான்றிதழ்களைப் பெறவும், தர்மாச்சார்யா – அடிப்படை பிரிவேனா – பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை போன்ற சான்றிதழ் பரீட்சைகளுக்காக திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலைப் பயன்படுத்துமாறும், மேலதிக தகவல்களுக்கு 011 278 4323 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்காக மின்னஞ்சல் ஊடாக பரீட்சை எண்களை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான தகவல்களை 011 278 1323 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

 

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகளில் பெயர் திருத்தங்களை மேற்கொள்வதற்காக 011 278 4537 அல்லது 011 278 4208 என்று இலக்கத்திற்கு அழைக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...