உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – 64 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

Date:

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 64 பேரையும் பலத்த பாதுகாப்பு மத்தியில் இன்று (19) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 2 ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 58 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட ஸஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம் செய்ய பஸ்வண்டி ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சந்தேகநபர்களை பார்வையிடுவதற்காக அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தின் வெளியில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...