உலகில் 135 நாடுகளுக்குள் நுழைந்தது டெல்ட்டா வைரஸ்!

Date:

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட, மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கொரோனா 135 நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, ஆல்ஃபா வகை கொரோனா உலகின் 132 நாடுகளிலும் பீட்டா வகை கொரோனா 81 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்ஃபா வகை கொரோனா 182 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா இதுவரை 135 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புதிதாக கொரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை மட்டும் 40 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மத்தியதரை, மேற்கு பசிபிக் பிராந்திய நாடுகளில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சர்வதேச அளவில் அந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

புதிய கொரோனா தொற்று கிழக்கு மத்தியதரைப் பிராந்தியத்திலும் 37 சதவீமும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 33 சதவீதமும் அதிகரித்துள்ளது.

தென்-கிழக்கு ஆசியப் பகுதிகளில் புதிய கொரோனா தொற்று 9 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...