கர்ப்பிணிகளுக்கு விசேட அறிவித்தல்!

Date:

கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார்.

 

வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியில், எதிர்நோக்கப்படும் சிக்கல்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தடுப்பூசி முக்கியமானதாகும்.

 

கொழும்பு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணியகத்தின் விசேட வைத்தியர் சஞ்சீவ கொடகந்த இதனை தெரிவித்துள்ளார்.தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதே கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பிற்கு சிறந்ததாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கடந்த சில வாரங்களில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மாரின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறினார்.இதன் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...