காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம்-ஜோ பைடன் எச்சரிக்கை!

Date:

காபூல் விமான நிலையத்தில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

இராணுவ தளபதியினால் இது தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க துருப்பினர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.எனினும் பிரித்தானிய தூதரக அதிகாரிகள் உட்பட சகலரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 170 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ்-கே அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா ஆளில்லா விமானக் கருவி தாக்குதலை மேற்கொண்டது.இதில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் தாக்குதல்களுக்கான திட்டத்தை வகுத்தவர் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...