கிழக்கு ஆயுர்வேத பொது மருத்துவமனை கோவிட் நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஆளுனர் பணிப்பு

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (10) காலை உள்ளூர் மருத்துவம் மூலம் ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள கப்பல்துறை, கிண்ணியா, புதுக்குடியிருப்பு  ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகள் வழங்கப்படும்.

இன்று (10) காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மாகாண ஆயுர்வேத ஆணையாளர்  டாக்டர் ஆர்.ஸ்ரீதர் மற்றும் ஆளுநருக்கு இடையிலான கலந்துரைமாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆயுர்வேத பொது மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை ஆராய்ந்து, அந்த குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, இந்த மருத்துவமனைகளில் 270 கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹஸ்பர் ஏ ஹலீம்_

Popular

More like this
Related

பொலன்னறுவை மும்மொழி தேசிய பாடசாலை நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பல்லின  மற்றும் மும்மொழி தேசிய...

பங்களாதேஷில் உச்சக்கட்ட பதற்றம்: டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் திருப்பி அழைப்பு!

தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக புது டெல்லியில் உள்ள பங்களாதேஷ் உயர்...

அனைத்து பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று (23) முதல்...

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...