கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம்

Date:

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதன் காரணமாக கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று சுகாதார துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் அதிகமாக கீரை வகைகள் மற்றும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விசேட வைத்தியர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வைரஸுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. எனவே, பொதுமக்களுக்கான ஒரே தீர்வு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது தான் என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய சூழ்நிலை, மக்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்க வழிவகுக்கும் என்பதனால், அனைவரும் காலை, மதிய மற்றும் இரவு உணவுகளை தவறாமல் சாப்பிடுவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், மாச்சத்து, உயிர்சத்து உணவுகள் நம் உணவில் பிரதானமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திக்கு விட்டமின் சி மிகவும் முக்கியமானது. அவை மரக்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து கிடைக்கின்றன. நாளொன்றிற்கு குறைந்தது 3 வகையான மரக்கறிகள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் புரதம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். பிஸ்கட், கேக் அல்லது இனிப்புகள் போன்றவற்றின் சத்துக்கள் மிகவும் மோசமானவை. அன்றாட வாழ்வில் பழங்கள், பால் மற்றும் தானிய வகை உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...