கொவிட் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 20 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் தொடர்பான வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.
குறித்த அனைவரும் கொவிட்டின் மூன்றாவது அலையினால் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு உயிரிழந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்டிருக்க வில்லை என தெரிவித்துள்ளார்.