கொவிட் 19 மரணத்தில் 16.7 வீதத்தினர் முஸ்லிம்கள்!

Date:

பியாஸ் முஹம்மத்.

இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் இறப்பவர்களில் இன விகிதாசார அடிப்படையில் 16.7 வீதமானவர்கள் முஸ்லிம்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்படுகின்ற வாராந்த கொரோனா மரண அறிக்கையின் இறுதியாக வெளிவந்த 14/06.2021 முதல் 20.08.2021 வரையான வாரத்துக்கான பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

இந்தத் தகவல்களின் அடிப்படையில் 20 ஆம் திகதி வரை இலங்கையில் கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக மரணித்த 6985 பேரில் 67.5 வீதமானவர்கள் (4710) சிங்களவர்களாவர். ஏனையவர்களில் 16.7 வீதமானவர்கள் (1164) முஸ்லிம்களாகவும், 12.2 வீதமானவர்கள் (849) தமிழர்களாகவும், 3.3 வீதமானவர்கள் (231) பறங்கியர்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள், இனம் தெரியாதவர்கள் மற்றும் ஏனையோரின் எண்ணிக்கை 18 (0.3 வீதம்) எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் விகிதாசாரம் 10 வீதமாக இருக்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய விடயம் என நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கொவிட் 19 தடுப்பூசியை முஸ்லிம்கள் அனைவரும் செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 24 ஆம் திகதி உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...