சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அஜித் ரோஹனவின் புகைப்படம் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்!

Date:

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவது போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் புகைப்படத்தில் இருப்பது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இல்லையெனவும், அது வேறு ஒருவரது புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இது TilTok செயலியில் இருந்து பெறப்பட்ட புகைப்படம் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தற்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அத்துரலிய ரத்தன தேரருக்கு விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம்...

அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் முன்னிலை

நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் ...

முன்னாள் அமைச்சர் நிமல் லன்சா கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர்  நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடை...

பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் தூதுவராக ஷ்முவேல் ரெவெல்: நியமனப்பத்திரம் அடங்கிய ஆவணங்களை பஹ்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடம் கையளித்தார்.

பஹ்ரைன் நாட்டுக்கான இஸ்ரேலின் புதிய தூதுவராக சாமுவேல் ரபல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான...