சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு ஒரே தடவையில் விசா!

Date:

இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விசா அனுமதி வழங்கும் செயன்முறையின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கைத்தொலைபேசி செயலியை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்கள் வரை செல்லுபடியாகும் விசா வழங்கப்படவுள்ளது.

இதற்காக சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 70 அமெரிக்க டொலர்களும், சார்க் அல்லாத நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 85 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படவுள்ளது.அத்துடன், சிங்கப்பூர், மாலைதீவு, மற்றும் சீஷெல்ஸ் நாடுகளைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படவுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...