நள்ளிரவு முதல் அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் அமுல்!

Date:

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் திகதி சரத்தின் கீழ் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களுக்கமைய இந்த பிரகடனம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்தல், அதிக விலைக்கு விற்றல், உள்ளிட்ட செயற்பாடுகளின் ஊடாக நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாகும் சந்தை முறைக்கேடுகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்தின் உறுதிப்பாட்டு விலை அல்லது சுங்கம் இறக்குமதி செய்த விலை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு, மேற்படி உணவு பொருட்களை கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு அங்கீகாரம்பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் ஊடாக மொத்தக் கொள்வனவுக்காக வழங்கப்பட்டுள்ள கடனை, கடன் பெற்றவரிடம் அறவீடு செய்யக்கூடியவாறும் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...