நாட்டில் நேற்றைய தினம், 248,656 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் 

Date:

இலங்கையில்  23,135 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதோடு, 1,021 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 153,678 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி இரண்டாவது தடவையும், 69,041 பேருக்கு முதலாவது தடவையும் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 711 பேர் முதலாவது தடவையாக பைஷர் தடுப்பூசியை பெற்றுள்ளதோடு, 75 பேர் இரண்டாவது தடவையாக பெற்றுள்ளனர்.

இந்த தரவுகளின் அடிப்படையில் நாட்டில் இதுவரையில் 11 இலட்சத்து 27 ஆயிரத்து 8 பேர் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முதலாலது தடவையாக பெற்றுள்ளனர். அவர்களில் 861,744 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 87 இலட்சத்து 94 ஆயிரத்து 593 பேருக்கு சைனோபாம் முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களில் 20 இலட்சத்து 61 ஆயிரத்து 775 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...