பிரபல சமூக சேவையாளர் அல் ஹாஜ் zam றிபாய் அவர்கள் சுகயீனம்!

Date:

அல்ஹாஜ் zam றிபாய் அவர்கள் நோய் வாய்ப்பட்டிருப்பதாக அறியக் கிடைக்கிறது.இந்த நாட்டில் பிரபலம் பெற்ற ஒருவராகவும் சமூக சேவை பணிகளுக்கு தன்னுடைய சொத்துக்களை வாறி வழங்குவதில் முன்னனி வகிக்கின்ற ஒருவராகவும் இவர் திகழ்கிறார்.இவர் பற்றிய குறித்த ஆக்கத்தை NewsNow வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

அல்ஹாஜ் zam றிபாய் அவர்கள்
இந்த நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்களும் அவரது அரும் பணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
அம்மாமனிதர் மிக வேகமாக சுகம் பெற்று எழ வேண்டும்.
அவருக்காக நாம் பிரார்த்திக்கிறோம்.

அல் ஹாஜ் zam றிபாய் ஹாஜி அவர்கள் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரும் ஆளுமை. கடந்த இரண்டரை தசாப்த காலத்திற்குள் முஸ்லிம் சமுகத்தின் கல்வி விருத்திக்காக தமது பொருளாதாரத்தை திசை திருப்பியவர்.

அல் ஹாஜ் zam றிபாய் ஹாஜி
அவர்களைத் தமது தேவைக்காக நாடிய எவரையும் அவர் வெறும் கையுடன் அனுப்பியவரல்லர். தேவையுடையோரின் தேவைகளை கேட்டறிந்தும் அதனை தேடியும் அந்தத் தேவை பூரணமாகுமளவு வாரி வழங்கியவர்.

ஏழைகளின் பல இன்னல்களை துடைத்தெறிந்தவர். பல வீடுகளுக்கு மின்சாரம் பொற்றுக் கொடுத்து தமது மறுமை இல்லத்தை வெளிச்சமாக்கிக் கொண்டவர்.

குழாய் நீர் உஊடாக தண்ணீரைப் பெற்றுக் கொடுத்து அர்ஷ்ஷுடைய நிழலில் இடம் பிடித்துக் கொண்டவர். ஹவ்ழுல் கவ்ஸர் அவரது தாகத்தை தீர்க்கும் உன்னதப் பேற்றை இங்கே கண்டு மகிழ்ந்தவர்.

அவரின் உச்சப் பணி தான் கல்விப் பணி.

தலைநகரிலும் அதனைச் சூழ உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பல பாடசாலைகளில் அவரது கட்டிடங்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றன். அவரது சுவன மாளிகைகள் அவை. பள்ளிகளையும் கட்டினார். பாடசாலைகளையும் கட்டினார். அவர் மட்டுமல்ல அவரது மகன் மகள்மார் பேரப் பிள்ளைகள் எல்லோரும் இணைந்து அவற்றில் மகிழ்வுடன் பங்கெடுத்தனர். அவ்வளவு பூரிப்பு அவர்களுக்கு. குடும்பமே ஒன்றிணைந்து சமூகப் பணி புரிவது அலாதியானதொரு இன்பம் தான்.

எமது அட்டுளுகமை அல்கஸ்ஸாலி மத்திய கல்லூரி 2800 பிள்ளைகளுடன் இடப் பற்றாக்குறையால் தள்ளாடியது. வருடாந்தம் தற்காலிகக் கொட்டகைகள் கட்டி அலுத்துப் போன சந்தர்ப்பம் அரசு 1000 பாடசாலைத் திட்டத்தை அறிமுகப்படுத்த அதன்படி ஆரம்பப் பிரிவை வேறாக்க வேண்டும்.

அதற்குக் காணி தேடி….. காணி எடுக்க பணம் தேடி அலைந்த போது zam றிபாய் ஹாஜி அவர்களை அணுக முடிவாயிற்று.

சென்றோம். மகிழ்ச்சியோடு வரவேற்றார். தேவை கேட்டறிந்தார். காணி எடுக்க பணம் தருவதில் ஒப்புதல் இல்லை அதனை உங்களுக்கு சேர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
எடுத்த எடுப்பில் இவ்வாறு கூறியது கொஞ்சம் ஏமாற்றம் போல்தான் இருந்தது.

ZAM பாரி சேர் தெரியுமா..அவர் அங்கு பணியாற்றினார் என்றவுடன்

என்னோடிருந்தவர்கள் என்னைப் பார்த்தனர். 1960 இன் முற்கூற்றில் நான் பிறக்க நினைத்திருக்கவுமில்லை..
ஆனால் முழு வரலாற்றையும் தேடி பாடசாலையின்ஆரம்ப ஆசிரியர் முதல் இற்றைவரையான 600க்கு மேற்பட்ட ஆசிரியர்களின் தொகுப்பு என்னிடம் இருந்தது.

ஆம் ஹாஜி ZAM பாரி ஏ.எல்எம் இப்றாகீம் போன்றோர் ஒரே காலப்பகுதியில் சேவையாற்றியுள்ளனர் என்றேன்.

சரியாகச் சரி என்றார் அந்தத் தொகுப்பையும் என்னிடம் கேட்டார். ஒரு இளவல் மூத்த ஒரு ஆசிரியரை அறிந்திருந்தமை அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பின்
அட்டுளுகமை அல்கஸ்ஸாலி க்கு ஒரு கட்டிடம் தர வேண்டும் என்ற விருப்பம் உண்டு அங்கு எனது நாநா பாரி சேர் கடமையாற்றினார் அவர் நினைவாக உங்களுக்கு மூன்று மாடிக் கட்டிடம் தருவேன் என்றார்.

அன்று கூறிய அந்தக் கட்டிடம் மிகவும் அழகுப் பொலிவுடன் மூன்று.மாடிகளாக எமது பாடசாலையை அழகாக்கி இருக்கின்றது.

தனது நானா சகோதரர் குறுகிய காலம் பணியாற்றியதை நினைந்து பல கோடி செலவில் மூன்று மாடிக் கட்டிடம் நிர்மாணிக்க அவருக்கு அல்லாஹ் அருளாளன் குடுத்த மனசு தான் காரணம்.

அல்கஸ்ஸாலிக்கு தனிப்பட்ட நபர் உவந்தளித்த இரண்டாவது கட்டிடம் இது. முதலாவது ஆரம்பப் பிரிவை ஆரம்பித்துக் கொள்ள முடியாமல் தள்ளாடிய போது பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் அல்ஹாஜ் நப்ளி அவர்கள் தனது தாயின் ஞாபகார்த்தமாக 7 வகுப்பறைகளியு சகல வசதிகளையும் கொண்ட உம்மு ஹாபிலா மண்டபத்தை நிர்மாணித்து.வரலாற்றில் முதலிடம் பிடித்துக் கொண்டார்.

இவ்வரிசையில் இரண்டாவது zam rufai haj building மூன்று மாடிகளுடன் அழகுறத் திகழ்கின்றது.

பணம் படைத்தவர்கள் எல்லோருக்கும் அதனை சரியாகப் பிரயோகிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. மனம் வேண்டும் அல்லாஹ்வின் அருட் பார்வையும் வேண்டும் அவன் தேர்ந்தெடுக்கவும் வேண்டும்.
கடந்த நூற்றாண்டில் நளீம் ஹாஜியார் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றார். இந்நூற்றாண்டின் முதற்கூறு zam றிபாய் ஹாஜிக்குரியது.

பணம் படைத்த பெரும் கோடீஸ்வரர்கள் விட்டுச் சென்ற சொத்துக்கள் அவர்களின் ஒரு தலைமுறையைக் கூட காக்கவில்லை. ஊதாரிப் பிள்ளைகளால் அழிந்து போன வரலாறு அநந்தம்.

ஆனால் zam rifai ஹாஜி தனது குடும்பத்திற்கே பரோபகாரத்தை காட்டிச் செல்கின்றார் அவர் வழியில் அவர் மகன் மகள் பேரர்கள்.

கொடுப்பதைப் போன்று பத்துமடங்கு அல்லாஹ் நினையாப் புறத்தால் தந்து விடுவான் என்ற நம்பிக்கை அனுபவம்…

இன்முகத்துடன் உரையாடி வாரி வழங்கும் அன்னார் சுகம் பெற வேண்டும். அல்லாஹ் அவரது ஹயாத்தை நீடித்து வைக்க வேண்டும்.

அவரின் வரலாறு பின்னுள்ளவர்களுக்குப் பாடமாக நூலுருப் பெற வேண்டும்.
எனது வேலைப் பளு மட்டும் என்னைத் தடுக்காதிருந்தால அவர் பக்கத்திலிருந்து எழுதியிருப்பேன்.(எம் எம். ஹிதாயத்துல்லாஹ்
அதிபர்
அல் ௧ஸ்ஸாலி தேசிய பாடசாலை)

செல்வந்தர்கள், வர்த்தக சமூகத்தவர்களுடைய பங்களிப்பு இந்த நாட்டுடைய சகல சமூகத்தவர்களுடைய முன்னேற்றத்திற்கும் சக்தியாக இருக்கிறது.எனவே அத்தகையவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக பிரார்த்திப்பதும்,கவலைப்படுவதும் ஒரு சமூகக் கடமையாகவும்,பொருப்பாகவும் உள்ளது.எனவே zam றிபாய் ஹாஜியாரின் சுகத்திற்கு நாங்களும் பிரார்த்திப்போம்.
சபாக்கல்லாஹ்.

Popular

More like this
Related

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...

நாட்டில் சில பகுதிகளில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்

இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...