புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதால் கொவிட் தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிக்கும்!

Date:

நாட்டில் நாளாந்தம் 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் புகைப்பிடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

 

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், நாளாந்தம் 15 வயதுக்கு குறைவான சுமார் 4,000 சிறுவர்கள் புகைப்பிடித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.

 

இதேவேளை, புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதன் காரணமாக கொவிட்-19 தொற்று உறுதியாகும் வீதம் அதிகரிப்பதாக சுகாதார அமைச்சின் கொவிட்-19 சம்பந்தமான பிரதான இணைப்பாளரும், சுகாதார சேவைகள் தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

 

அத்துடன், குறித்த செயற்பாடுகள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...