மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் | கவலைக்கிடமான நிலையில் இளைஞன்

Date:

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக பொலிஸாரின் சமிக்கையை மீறி மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரடியனாறு பங்குடாவெளிச்சந்தியில் இன்று அதிகாலை 3 மணியளவில் சட்டவிரோத மணல் அகழ்ந்து உழவுஇயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது பொலிஸார் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்த போதும் உழவு இயந்திரம் பொலிஸாரின் சமிக்கையை மீறி சென்ற நிலையில் பொலிஸார் அதனை துரத்திச் சென்று உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.துசாந்தன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...