மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

Date:

மத்திய மலை நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருகிறது.நேற்று(11) இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஆறுகள் ,நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.இதனால் மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகளும் இன்று (12) காலை திறக்கப்பட்டன.

காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இன்று காலை 70 மில்லிமீற்றர் இற்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன.இதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.

இதே வேளை நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கங்கள் தற்போது நிறைந்த காணப்படுவதனால் உச்ச அளவில் மின் உற்பத்தி நடைபெறுவதாக மின்சாரசபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...