முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சைப் பெற்று வருகிறார்.
எவ்வாறாயினும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மங்கள சமரவீரவின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவர் சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்படவுள்ளதாகவும் மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் என்று தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது அத்துடன் இதனை பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உறுதி செய்ததாகவும் மற்றுமோர் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .