ஸ்மார்ட் தடுப்பூசி இலத்திரனியல் சான்றிதல் அட்டையை விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்!

Date:

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்பட்டதை உறுதிப்படுத்தும் ஸ்மார்ட் தடுப்பூசி (Smart Vaccination Certificate) இலத்திரனியல் சான்றிதல் அட்டையை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

சுகாதார அமைச்சும் உலக சுகாதார அமைப்பும் (இலங்கை) இணைந்து கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் இலத்திரனியல் அட்டையை அறிமுகப்படுத்துவதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA )நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சான்றிதழ் தற்போது வெளிநாடு செல்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது.மேலும், தடுப்பூசி வழங்கப்பட்டதற்கான பதிவு செய்த அட்டையை தவறவிட்டவர்கள் யாராயினும் இருப்பார்களாயின், அவ்வாறானோர் தாம் வசிக்கும் பகுதியின் பொது சுகாதார பரிசோதகருடன் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்று கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, https://covid-19.health.gov.lk/certificate/ இணைய தளத்தில் பிரவேசித்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே இந்த Smart Vaccination Certificate அட்டையை பெற்றுக்கொள்ள முடியும்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...