நாளை(15) முதல் அம்பலாந்தோட்டை நகரின் அனைத்து விற்பனை நிலையங்களையும் மூட அம்பலாந்தோட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
அம்பலாந்தோட்டை நகரை சுற்றியுள்ள பிரதேசங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பிரதேசங்களில் இருந்து அம்பலாந்தோட்டை நகருக்கு மக்கள் அதிகளவில் வருவதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானத்தை ஒரு வாரத்திற்கு நடைமுறைப்படுத்தவும் பின்னர் நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு விற்பனை நிலையங்களை திறப்பதா அல்லது தொடர்ந்தும் மூடுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அம்பலாங்கொடை வர்த்தக சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.