அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது | எதிர்க்கட்சித் தலைவர்

Date:

அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு சமூகமளிக்குமாறு கூறி அரசாங்கம் புதிய சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளதால் இது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக் கொண்ட தாய்மார்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு இதுவரை தடுப்பூசி போடப்படவில்லை என்றும், இந் நிலையில் அவர்களை சேவைக்கு அழைத்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு தீவிரமான மட்டத்தில் உள்ளது என்றும் இவற்றினால் ஏற்ப்படும் இறப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். இன்று (02) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

வலையொளி இணைப்பு-

Popular

More like this
Related

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...