தாலிபான்கள் ஆப்கனிஸ்தானின் தலைநகரான காபூலை கைப்பற்றி முன்னேறியதால் அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் கானி மற்றும் அவரது குடும்பத்தை வரவேற்றுள்ளதாக ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை ஒரு வீடியோ உரையில், ஆப்கானிஸ்தானில் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகவும் “ஒரு பெரிய பேரழிவு ஏற்படக்கூடாது என்பதற்காகவும் தான் நான் அவ்வாறு செய்தேன் என அஷ்ரப் கானி கூறியுள்ளார்.
அவர் ஒரு பெரிய பணத்தொகையுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்தார் என்ற வதந்திகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” மற்றும் “பொய்கள்” என்றும் அவர் கூறினார்.
அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறியதற்காக மற்ற ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.