இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் – மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி!

Date:

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர், மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் டெல்லி- செங்கோட்டைக்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் வைத்தியர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதன்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.மேலும் தேசியக்கொடி ஏற்றும் போது முதல் முறையாக இரு விமான படை விமானங்கள் ஊடாக மலர்கள் தூவப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...