இன்று நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்!

Date:

புகையிரத திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதன்படி அந்த சங்கத்தினால் பொதுமக்களுக்கு கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாளை(13) வெள்ளிக்கிழமை புகையிரத சேவைகள் இடம்பெறாது என்றும், புகையிரதத்திற்காக காத்திருக்க வேண்டாம் எனவும் புகையிரத திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நிலையப் பொறுப்பதிகாரிகள், கனிஷ்ட பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான எந்த ஏற்பாட்டினையும் அரசாங்கம் செய்யவில்லை என்று அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலைமையினால் புகையிரதங்களில் பயணிப்பவர்களுக்கு கடும் பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

Popular

More like this
Related

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...