இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் அகில உலகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இரு மகாயுத்தங்கள் இடம்பெற்றன. இவ்விரு யுத்தங்களும் ஐரோப்பாவில் ஆரம்பித்து பின் ஏனைய கண்டங்களுக்கும் பரவின. உலகில் பலம் பொருந்திய நாடுகள் பலவும் இந்த யுத்தத்தில் ஈடுபட்டு முழு உலகிலும் தாக்கத்தை ஏற்படுத்தியமையால் இவை உலக மகாயுத்தங்கள் என அழைக்கப்படுகின்றன. இவ்விரு யுத்தங்களினால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக மீண்டும் உலக மகாயுத்தம் ஒன்று ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு உலகத் தலைவர்கள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தினர் ஆனாலும் அது பலனளிக்கவில்லை.
ஜப்பானின் நடவடிக்கைகள்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆசிய நாடுகளில் ஜப்பான் முன்னேற்றகரமான நாடாக வளர்ச்சியடைந்தது. இந்நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களைப் பெறவும் முடிவுப் பொருள்களை விற்பனை செய்யவும் வர்த்தகச் சந்தைகளைத் தேட வேண்டிய தேவை ஏற்பட்டது. எனினும் அப்போது ஆசியாவின் பெரும்பாலான பிரதேசங்கள் ஐரோப்பியர்களின் குடியேற்ற நாடுகளாக இருந்தன. அதனால் ஜப்பானின் மேற்கூறிய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயலும்போது அல்லது ஆசியாவில் ஜப்பானிய பேரரசு ஒன்றைக் கட்டியெழுப்பும் போது கண்டிப்பாக ஐரோப்பிய நாடுகளுடன் மோதல்களை ஏற்படுத்தும் பின்புலம் உருவாகி இருந்தது. 1934 இல் ஜப்பான் வட சீனாவில் மஞ்சூரியாவை ஆக்கிரமித்து அதனைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்தது. ஜப்பானின் ஆக்கிரமிப்புக் கொள்கை சர்வதேச சங்கத்தின் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட பொழுது ஆக்கிரமிப்பு சம்பந்தமாக சர்வதேச சங்கத்தின் முன் ஜப்பான் குற்றவாளியாகியது. இச்சந்தர்ப்பத்தில் சர்வதேச சங்கத்திலிருந்து விலகிய ஜப்பான் சீனாவின் முக்கியத் துறைமுகங்கள் மற்றும் நகரங்கள் சிலவற்றைக் கைப்பற்றித் தனது ஆக்கிரமிப்புக் கொள்கையைத் தொடர்ந்தது. ஹிட்லரினதும் முசோலியினதும் நடவடிக்கைகள்ஐரோப்பாவில் ஆரம்பத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தினவோ அதேபோன்றதொரு தாக்கத்தை ஜப்பானின் நடவடிக்கைகள் ஆசியாவில் ஏற்படுத்தின.
இதனால் இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பிக்கும் பொழுது ஜப்பான் ஆசிய நாடுகளின் ஆக்கிரமிப்பாளராக உருவெடுத்தது. இவ்வாறு போர் என்னும் நெருப்பு ஆசியாவில் விரைவாகப் பற்றுவதற்கு ஜப்பானின் நடவடிக்கைகள் காரணங்களாக அமைந்தன.
ஐக்கிய அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபடுதல்!
ஜேர்மனியும் இத்தாலியும் ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது ஜப்பான் ஆசியாவின் பேரரசைக் கட்டியெழுப்பும் பொருட்டு ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டமை பற்றி முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் இவ்வேளையில் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா ஐக்கிய நாடுகளுடன் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மோதல்களின்போது பேர்ள் துறைமுகத்தின் இராணுவ முகாம் ஜப்பானுக்குப் பெருந்தடையாக இருந்தது. இதனால் 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜப்பான் பேர்ள் துறைமுகத்தின் கடற்படை முகாமிற்கு குண்டு வீசித் தாக்கியது. இந்த நிகழ்வினால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஜனாதிபதியான பிராங்ளின் ரூஸ் வேல்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தார். அதன்படி ஜப்பானுடன் இணைந்திருந்த ஜேர்மன், இத்தாலி ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தன. எனவே 1941 ஆம் ஆண்டின் இறுதிவரை ஐரோப்பாவிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த யுத்தம் உலக மகாயுத்தமாக மாறியது.
ஜேர்மனியின் அடுத்த இலக்காக பிரித்தானியா இருந்தது. ஹிட்லர் விமானப் படைகள் மூலம் பிரித்தானியாவை ஆக்கிரமிக்கத் தீர்மானித்தார். அதன்பின் ஜேர்மன் விமானப் படைகள் பிரித்தானிய விமான நிலையங்களையும் நகரங்களையும் குண்டு மழை பொழிந்து அதிரவைத்தன. பிரித்தானியாவிடம் பலம் வாய்ந்த கடற் படையும் விமானப்படையும் இருந்தன. பிரித்தானியாவும் அந்தப் பலத்தைப் பயன்படுத்தி எதிரிகளின் விமானங்களை அழிப்பதற்காகத் தாக்கும் விமானங்களைப் பயன்படுத்தியது. 1940 செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி இரு அணியினரிடையேயும் மிகவும் கொடிய வான்போர் நிகழ்ந்தது. அதன் பொழுது பிரித்தானிய விமானப் படையினரால் ஜேர்மனியின் 56 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் போர்ப் பலம் ஹிட்லர் நினைத்ததை விட மிகவும் முன்னிலையில் இருப்பதையும் அதன் வீரமிக்க செயல்திறனையும் உணர்ந்து கொண்ட ஹிட்லர் பிரித்தானியாவைத் தாக்கும் தனது முயற்சியை நிறுத்தியது.
ஜப்பான் சரணடைதல்.
ஜப்பான் தனது போர்ப்பலத்தை நிரூபித்து சிங்கப்பூர், மலேசியா, பர்மா, ஹொங்கொங் முதலிய பிரித்தானியக் குடியேற்ற நாடுகளைக் கைப்பற்றியது.அடுத்ததாகப் போர்னியோ, ஜாவா, சுமாத்திரா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும் கைப்பற்றியது.
1942 ஏப்ரல் 05 ஆம் திகதி கொழும்புக்கும் ஏப்ரல் 07ம் திகதி திருகோணமலைக்கும் குண்டு வீசப்பட்டன.இதனால் ஜப்பான் இராணுவம் இலங்கையை ஆக்கிரமிக்கலாம் என எண்ணிய பிரித்தானியர்கள் தமது படை அணிகள் சிலவற்றை இலங்கைக்கு நகர்த்தினர்.எனினும் இரு அணிகளுக்குமிடையே எவ்வித மோதல்களும் இலங்கையில் நடைபெறவில்லை.
ஜப்பானுக்கும் நட்பு நாட்டு படைகளுக்கும் இடையே கடுமையான போர் மூண்டதோடு அந்தப் போர்களின் மூலம் ஜப்பான் தோல்வியடைந்தது. தோல்வியடைந்த வண்ணம் இருந்த ஜப்பானுக்கு நட்பு நாடுகள் மூலம் விடுக்கப்பட்ட இறுதி அறிவித்தல்களையும் ஜப்பான் நிராகரித்தமையால் கி.பி. 1945 ஆகஸ்ட் 6 ஹிரோசிமா மீதும் ஆகஸ்ட் 9 ஆந் திகதி நாகசாக்கி நகர் மீதும் ஐக்கிய அமெரிக்காவினால் அணுகுண்டுகள் வீசப்பட்டன. சில விநாடிகளில் இரு நகரங்களும் அழிந்ததோடு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அதனை விடப் பெருந்தொகையானோர் காயமடைந்தனர். அணுகதிர் வீச்சின் தாக்கத்தால் பெருந்தொகையானோர் பரம்பரை ரீதியான நோயாளர்கள் ஆனார்கள். இந்தப் பேரழிவைக் கண்ணுற்ற ஜப்பானின் ஹிரோஹித்தோ பேரரசன் 1945 ஆகஸ்ட் 14 ஆந் திகதி நிபந்தனையற்ற விதத்தில் சரணடைய இணங்கியதோடு இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்தது.
76 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவீச்சுகளின் பாதிப்புகளை தெளிவாக நினைவில் வைத்திருக்கும் 3 பெண்களின் கருத்துக்கள்.
டெருக்கோ உயெனோ
1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட போது உயிர்தப்பிய டெருக்கோவுக்கு அப்போது வயது 15.
ஹிரோஷிமா செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனை வளாகத்தில் மழலையர் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
குண்டு வீச்சு நடந்ததும், மருத்துவமனையில் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த பகுதி தீ பிடித்தது. தீயை அணைக்கும் முயற்சியில் டெருக்கோ உதவிகள் செய்தார். ஆனால் அவருடன் தங்கியிருந்த நிறைய குழந்தைகள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
குண்டுவீச்சு நடந்து ஒரு வாரம் கழித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடூரமான காயங்களைக் குணப்படுத்த இரவு, பகலாக பலரும் வேலை பார்த்ததை இவர் நேரில் பார்த்திருக்கிறார். இவருக்கு சாப்பிட உணவு கிடைக்கவில்லை. தண்ணீரும் சிறிதளவு தான் கிடைத்தது.
படிப்பை முடித்த பிறகு, டெருக்கோ அதே மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். தோல் மாற்று சிகிச்சைகளில் அவர் உதவியாளராக இருந்தார்.(தகவல் :பீபிஸி)
தாக்குதல் தினத்தில் ஹிரோஷிமா!
காலை எட்டு மணி. அன்று காலை வழமை போன்றே ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எல்லோரும் காலை பரபரப்பில் இருந்த நேரம். பிள்ளைகள் பள்ளிக்கு போக தயார் நிலையில்; அப்பா, சில வீட்டில் அம்மாவும், வேலைக்கு போக தயார் நிலையில். தாய்மார்கள் மதிய உணவும் காலை உணவும் தயாரிக்கும் மும்முரத்தில் இருந்தார்கள்
தீடிர் என ஒலி ஒலித்தது . எதிரி விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை. விமானம் எங்கு குண்டுபோடுமோ, யார் யார் மடிவர்களோ என்ற அச்சமும் பீதியும் அனைவரையும் வாட்டியது.
விமானத்திலிருந்து குண்டு விழும்; பெரும் சப்தம் கேட்கும் என எதிர்பார்ப்புடன் இருந்த அனைவரும் சற்றே வியப்பில் ஆழ்ந்தனர். தலைக்கு மேலே இரண்டு விமானங்கள் பறந்தன. எங்கு குண்டு. போடுமோ என அச்சப்பட்டு அண்ணாந்து பார்த்தவர் வியப்பில் ஆழ்ந்தனர். முதலில் வந்த விமானம் பூசணிக்காய் போன்ற ஏதோ ஒன்றைப் பரசூட்டின் மூலம் கீழே போட்டுவிட்டுச் சென்று விட்டது. இரண்டாவது விமானம் அங்கேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. சிலர் விமானத்திலிருந்து ஏதோ விழுகிறதே என வேடிக்கை பார்த்து நின்றனர் … அடுத்து ஏற்படப்போகும் அவலத்தை அறியாமல்.
விமானம் இட்ட குண்டு வெடிக்கவில்லை; பெரும் சப்தம் எதுவும் எழுப்பவில்லை. அனால் எங்கும் பரவியது பெரும் ஓளி. கண்ணை கூசும் ஒளி. ஒளியின் பிரகாசம் அவ்வளவு அதிகமாக இருந்ததால் ஒன்றன பின் ஒன்றாக இரண்டு ஒளி வீச்சு ஏற்பட்டது. ஒளி வீச்சிற்கு பிறகு சுமார் 20000 அடி உயர்ந்த புகை தூசு மண்டலம் தென்பட்டது. வானம் இருண்டது; அதுவரை தெளிவாக இருந்த வண்ணம் முற்றிலும் தூசு படிந்து இரவு போல் ஆகியது.
ஒளிவீச்சுப்பட்டவர்கள் தீடிர் என அதனைஉணர்த்தனர்; அவர்களது ஆடைகள் எரிந்து போயிருந்தன. சுற்றும் முற்றும் வீடுகள் இடிந்து போயிருந்தன. கண்ணாடி உடைந்து சிதறி பலர் காயம் அடைந்தனர். அந்த நகரமே அழிந்து போயிருந்தது. எல்லாம் ஒரு சில வினாடிகளில் ஒளி வீச்சு அடங்கியதும் எங்கும் பரவியது பெரும் தீயுடன் சற்று நேரத்தில் நகரின் மையப்பகுதி பெரும் தீயில். எரிகின்ற பொருட்கள் எல்லாம் தாமே எரியதுவங்கின; மனிதர்களின் தோல் கூட அணலில் வெந்து உரிந்து.
குண்டு வீச்சின் மையப்பகுதில் கன நேரத்தில் ஆயிரக் கணக்கானோர் சட்டென்று பஸ்பமகினர். அவர்களது எலும்பு கூட மிஞ்சவில்லை. எல்லாம் கன நொடியில் எரிந்தது; சாம்பல் கூட மிஞ்சாமல் போயிற்று. அவ்வாறு மடிந்தவர்கள் பெரும் வேதனையும் வலியும் இல்லாமல் இறந்து போயினர். ஆனால் குண்டு வீச்சின் மையப்பகுதியிற்கு சற்றே விலகி இருந்தவர்கள் தீயிலும் இடிபாடுகளிலும் பட்டு வலி வேதனையுடன் மடிந்தனர். எங்கும் அவலக்குரல்.காப்பாற்ற,உதவிக்கரம் நீட்ட ஒரு ஆள் கூட மிஞ்சவில்லை.
ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டுக்கு பிறகு அடுத்த சில நாட்களில், ஆகஸ்ட் 9 அன்று நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது. இந்த அணுகுண்டு வெடிப்பில் சுமார் ஒரு லட்சம் பேர் மடிந்தனர். ஹிரோஷிமா மீது வீசிய அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (LITTLE BOY) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது போடப்பட்ட அனுகுண்டிற்கு மனிதன்’ (FAT MAN) என்று பெயர் சூட்டினர்.
அன்று ஹிரோஷிமாவில் இருந்தவர்களுக்கு தெரியாது தமது நகரத்தின் மீது விழுந்தது அணுகுண்டு என்று. அணுகுண்டு வீச்சுக்கு உள்ளான முதல் நகரம் ஹிரோஷிமா. நகரின் மொத்த மக்கள்தொகையான 3,50,000 நபர்களில் சுமார் 70,000 அந்த சில நிமிடங்களில் மடிந்தனர்; இந்த குண்டு வீச்சு காரணமாக மேலும் 70,000 அடுத்த சில நாட்களில் மடிந்தனர் இதே போல நாகசாகியில் சுமார் 74,000 மக்கள் மடிந்தனர்.. இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.குழந்தைகள், பொது மக்கள், முப்படைந்தோர் என பலயிரக்கனக்க்னோர் மடிந்த ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடிப்பில் மடிந்தவற்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் “இனி எப்போதும் இப்படிப்பட்ட கொடூரத்தை நடக்க விட மாட்டோம்’ என பொறிக்கப்பட்டுள்ளது. ஆம்; இனி இதுபோன்ற கொடூரம் எங்கும் நடைபெறக்கூடாது.
மால்கம் எக்ஸ் எனும் அமெரிக்க கருப்பின தலைவர் “சமதானத்தை விடுதலையிலிருந்து பிரித்துப் பார்க்க கூடாது ஏன் எனில் விடுதலையில்லாத எவரும் சமாதானமாக இருக்க மாட்டார்கள்” என கூறியதை நினைவு கொள்ளுதல் வேண்டும். உலக சமாதானம் மானுட விடுதலையிலிருந்து பிரிக்க முடியாது.
உலகளாவிய அளவில் மானுட விடுதலைக்கு அச்சுறுத்தலாக அணுகுண்டுகள் மட்டுமல்ல உலக வெப்பமடைதல் பிரச்சனையும் எழுந்துள்ளது. இந்த ஹிரோஷிமா தினத்தில் இவை குறித்து மீள்பார்வை செய்வது பொருத்தமாக இருக்கும்.
தாக்குதலின் பின்னரான சூழ்நிலை!
ஹிரோஷிமா நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, இன்றுவரை சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைகளுக்காக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு சோவியத் யூனியண் தனது முதல் அணு ஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஹைட்ரஜன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் ஏற்பட்ட ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு மேலை நாடுகள் வளரும் நாடுகளை அச்சுறுத்த அணுஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.
அமெரிக்க, இரசியா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா, இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வட கொரியா ஆகியவை அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகள். பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை
தெரிந்து கொண்டிருக்கலாம் என்ற ஐயம் உள்ளது.
உதாரணமாக, இஸ்ரேல். தென் ஆப்ரிக்கா வெள்ளை ஆதிக்கத்தில் இருந்தபோது அணு ஆயுதத்தை செய்தது; கருப்பின மக்கள் விடுதலைக்கு பிறகு, நெல்சன் மண்டேலா தனது நாடு அணுஆயுதங்களை ஒழித்து அனுஆயுதமற்ற நாடக மாறும் என அறிவித்தார்.
அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் முதலாவது இடத்தில் இருக்கிறது. ஆயினும், சில நாடுகளை நம்ப முடியாது; அவர்கள் அணுஆயுதத்தை வைத்திருப்பது ஆபத்து எனக்கூறி அமெரிக்க சில நாடுகளை குறிப்பாக தாக்கி வருகிறது.
அண்மைக் காலமாக, ஈரான் அணு ஆயுத் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாற்றுகிறது. இது போன்று ஆதாரமே இன்றி குற்றம் சுமத்தி தான் ஈராக் மீது அமெரிக்க படை எடுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சர்வதேச அரங்கில் நாடுகளிடையே ஏற்ற தாழ்வுகளை உருவாகவும் அணுஆயுத அரசியல் பயன் படுத்தப்படுகிறது. சர்வதேச அளவில் அணுஆயுத நாடுகள் அணுஆயுத அற்ற நாடுகள் என பிரிவுபடுத்தி நாடுகளிடையே பாரபட்சம் உருவாக்கியது .அமெரிக்க. அணு ஆயுத மேலை நாடுகள் தமது ராணுவ பலத்தினை கொண்டு ஏனைய நாடுகள் மீது தமது மேலாண்மையை நிலைநாட்ட முயல்கிறது.
ஐந்து அணுஆயுத நாடுகள் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஓப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்துகின்றன.
அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்ததில் சரத்துகள் விவாதத்துக்குரியவையாக பாரபட்சமனவை. அணுஆயுத ஒழிப்பு குறித்து எவ்வித தீர்மானமான வாக்குறுதிகளும் இல்லை. ஆனால் வேறு நாடுகள் அனுஆயுதத்தினை வைத்திருக்க கூடாது என்கிறது இந்த அணுஆயுத பரவல் தடை சட்டம். எனவே இந்திய உட்பட சில நாடுகள் இந்த ஒப்ந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நிலைப்பாடு எடுத்தன. இதன் காரணமாக இந்தியாவின் அணு ஆற்றல் உற்பத்திக்கு உதவமுடியாது என அமெரிக்க மறுத்ததோடு அல்லாமல், வேறு நாடுகளும் உதவக்கூடாது என வற்புருத்திவருவது அறிந்தது. தான் மட்டும் அணுகுண்டுகளை தேக்கி வைக்கலாம், அனால் ஏனைய நாடுகளுக்கு அந்த உரிமை இல்லை என்பது ஏற்கமுடியாது என இந்திய தார்மிக நிலைப்பாடு எடுத்துவந்துள்ளது. அணுஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்; அதற்கான சர்வதேச ஒப்பந்தம் வேண்டும் எனவும் கூறி வருகிறது.
1990 களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில், அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன. அனால் நடைமுறையில் இது செயல்பாட்டில் வரவில்லை என்பது மட்டுமல்ல புதுப்புது ஆயுதங்கள், விண்வெளியில் போர் கருவிகள் என ஆயுதக்குவிப்பை அமெரிக்க செய்துவருகிறது. கியூபாவுடனான போர் முதற்கொண்டு, நேரடியாகவும் சூசகமாகவும் அமெரிக்க தனது அணுஆயுதங்களை பயன் படுத்துவேன் என அச்சுறுத்தி வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அணுகுண்டு வீச்சினால் உலகம் இதுவரை சந்தித்திராத அழிவு; அவலம் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள், முப்படைந்தோர் என எவ்வித பாரபட்சமும் இன்றி, எந்த நெறிமுறையும் இன்றி அணுகுண்டு. கூட்டுக் கொலை செய்தது. இந்த குண்டு வெடிப்பு மனித நேயம் உள்ளவர் அனைவரின் மனசாட்சியை உலுக்கி எழுப்பியது. போரே மனித நேயத்திற்கு விரோதமானது என்றாலும், குறிப்பாக அணுஆயுத் பயன்பாடு மனிதகுலத்திற்கு எதிரான குற்ற செயல் என சர்வதேச அரங்கில் கருத்து உருவானது. போரில் பொதுவாக போர்வீரர்களை மட்டும் தான் தக்க வேண்டும் என்ற போர் நெறி உண்டு. பொது மக்களை தக்க கூடாது என்பது விதி. போரின் நடுவே தப்பிதமாக பட்டுவிட்ட பொது மக்கள் குண்டு வீச்சில் மடியலாம்; அனால் வேண்டும் என்றே குறிவைத்து பொது மக்களை; ஆயுதம் ஏந்தாத மக்களை கொள்வது போர் குற்றம் என சர்வதேச சட்டம் கூறுகிறது. அனுஆயுதத்தினால் போர்வீரர்களை விட பல மடங்கு பொது மக்கள் மடிவர்; ஒரு நகரமே அழிந்துபோகும். எனவே அணுகுண்டு பயன் படுத்துவது, பயன்படுத்துவதாக அச்சுறுத்துவது எல்லாமே போர்குற்றம் என சர்வதேச நீதிமன்றம் (பெரும்பான்மை நீதிபதிகள் முடிவு) அறிவித்துள்ளது. ஆயினும் இந்து உலகம் முழுமையும் உலகை ஒரு முறை என்ன பல முறை அழிக்க தேவையான அணுஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன. அணுஆயுதங்களை விடாப்பிடியாக வைத்திருக்கும் மேலை நாடுகள், குறிப்பாக அமெரிக்க, உலக அரங்கில் தாதாவாக செயல்பட்டு மற்ற எல்லா நாடுகளின் மீதும் தமது மேலாண்மையை திணிக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இதில் தென்படுகிறது என்று கூறுவதில் ஐயமில்லை.
இந்த அணுகுண்டு வீச்சினால் உலகம் இதுவரை சந்தித்திராத அழிவு; அவலம் ஏற்பட்டது. குழந்தைகள், பெண்கள், முப்படைந்தோர் என எவ்வித பாரபட்சமும் இன்றி, எந்த நெறிமுறையும் இன்றி அணுகுண்டு. கூட்டுக் கொலை செய்தது. இந்த குண்டு வெடிப்பு மனித நேயம் உள்ளவர் அனைவரின் மனசாட்சியை உலுக்கி எழுப்பியது. போரே மனித நேயத்திற்கு விரோதமானது என்றாலும், குறிப்பாக அணுஆயுத் பயன்பாடு மனிதகுலத்திற்கு எதிரான குற்ற செயல் என சர்வதேச அரங்கில் கருத்து உருவானது. போரில் பொதுவாக போர்வீரர்களை மட்டும் தான் தக்க வேண்டும் என்ற போர் நெறி உண்டு. பொது மக்களை தக்க கூடாது என்பது விதி. போரின் நடுவே தப்பிதமாக பட்டுவிட்ட பொது மக்கள் குண்டு வீச்சில் மடியலாம்; அனால் வேண்டும் என்றே குறிவைத்து பொது மக்களை; ஆயுதம் ஏந்தாத மக்களை கொள்வது போர் குற்றம் என சர்வதேச சட்டம் கூறுகிறது. அனுஆயுதத்தினால் போர்வீரர்களை விட பல மடங்கு பொது மக்கள் மடிவர்; ஒரு நகரமே அழிந்துபோகும். எனவே அணுகுண்டு பயன்படுத்துவது, பயன்படுத்துவதாக அச்சுறுத்துவது எல்லாமே போர்குற்றம் என சர்வதேச நீதிமன்றம் (பெரும்பான்மை நீதிபதிகள் முடிவு) அறிவித்துள்ளது. ஆயினும் இந்த உலகத்தை ஒரு முறை என்ன பல முறை அழிக்க தேவையான அணு ஆயுதங்கள் குவிந்து கிடக்கின்றன. அணுஆயுதங்களை விடாப்பிடியாக வைத்திருக்கும் மேலை நாடுகள், குறிப்பாக அமெரிக்க, உலக அரங்கில் தாதாவாக செயல்பட்டு மற்ற எல்லா நாடுகளின் மீதும் தமது மேலாண்மையை திணிக்க வேண்டும் என்ற நோக்கம் தான் இதில் தென்படுகிறது காலப்போக்கில் நமது சிறிய தீவான இலங்கையிலும் அவர்களுடைய ஆணவ ஆக்கிரமிப்பை துவங்குவார்கள் என்று கூறுவதில் மாற்றுக் கருத்து இல்லை.
தொகுப்பு:அப்ரா அன்ஸார்
Super contant writer it’s really interesting to read.