இன்று மதியம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், பிரச்சினையின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் பிரச்சினையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
தற்போது முழு உலகமும் எதிர்நோககியுள்ள இந்த கொடிய வைரஸ் பிரச்சினைக்கு மத்தியிலும், நமது நாட்டில் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டும், அரசு இந்த பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காண முனைப்புடன் செயல்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.