அமெரிக்காவிலிருந்து மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன. இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பைஸர் தடுப்பூசித் தொகுதியை ஏற்றிய விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தடுப்பூசி தொகுதியானது கொழும்பிலுள்ள மத்திய சேமிப்பகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.