வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக உடனடியாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அனைவரும் தொற்றுக்கு உள்ளாகும் நிலமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுள் நூற்றுக்கு 1.5 சதவீதமானோர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.