கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை அரசாங்கம் மறைக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருததுத் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. முழு நாடும் மரண பீதியில் உள்ளது. நாளாந்த பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது.எனினும், அரசாங்கத்தினால் வெளியிடப்படும் தகவல்கள் உண்மை இல்லை என்ற தகவலை பொறுப்புடன் கூறுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.