இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சிஐடியால் )அவரது இல்லத்தில் வைத்து சற்று முன் கைது செய்யப்பட்டார்.
நாட்டின் எரிபொருள் இருப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்த காரணத்தினாலே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
திரு.ஆனந்த பாலிதவுக்கு உதவுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு தற்போது சம்பவ இடத்திற்கு சமூகமளித்த வன்னமுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.