குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட தொழிற்சங்க உறுப்பினர் ஆனந்த பாலித்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (22) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்திருந்தமை காரணமாக அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.