கட்டுப்பாடுகளுடன் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி

Date:

இலங்கையில் பதிவுத் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணங்களை வீட்டிலோ அல்லது திருமண மண்டபத்திலோ நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரையில் தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையிலேயே தனிமைப்படுத்தல் உத்தரவுகள் குறித்து விளக்கமளித்த பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின், சம்பந்தப்பட்டவர்களின் வீட்டில் அதனை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகியோருடன், அவர்களின் பெற்றோர்களும், பதிவாளரும், சாட்சியாளர்கள் இருவரும் பங்கேற்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தவிர்த்து வேறு எவருக்கும் இதன்போது பங்கேற்க அனுமதி வழங்கப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...