கரையோர பாதை நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும் -அமைச்சர் ஜோன்ஸ்டன்!

Date:

தெஹிவளை ரயில் நிலையத்திலிருந்து பாணந்துறை வரையிலான கரையோர பாதையை நீடிக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, தெஹிவளையில் இருந்து பாணந்துறை வரையிலான 17 கி.மீ.வீதியின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.உத்தேச தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையிலான வீதிக்காக ரூ. 38 பில்லியன் செலவிடப்படும். இந்த வீதியை நிர்மாணிப்பதன் காரணமாக காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ. 21 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு-காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர பாதையின் ஆறு கட்டங்கள் நிறைவடைந்துள்ளது.இராமகிருஷ்ண வீதியில் இருந்து மெல்பெர்ன் அவென்யூ வரை, மெல்பெர்ன் அவென்யூவில் இருந்து கிளென் எபெர் பிளேஸ் வரையும் , க்ளென் எபெர் பிளேஸ் முதல் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் வரை, இராமகிருஷ்ண வீதியில் இருந்து பேஸர் அவென்யூ வரை , கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் முதல் ரன்முத்து ஹோட்டல் வரை மற்றும் பேசர் அவென்யூவில் இருந்து தெஹிவளை ரயில் நிலையம் வரை தற்பொழுது நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Popular

More like this
Related

தரம் 06 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025 – தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்...

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...