கல்விசார் ஊழியர்களும் நாளை முதல் கடமைக்கு சமுகமளிக்க வேண்டுமா?

Date:

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நாளைய தினம் முதல் அனைத்து அரச பணியாளர்களும் வழமை போன்று அரச பணிகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

 

ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கொவிட் பரவல் கட்டுப்பாட்டு ாக்கில், அரச பணியாளர்களை சுழற்சி முறையிலும், வரையறைக்கு உட்பட்ட அளவிலும் அழைத்து பணி செய்விக்கும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றுநிருபங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

 

அதேநேரம், சகல அரச பணியாளர்களையும் வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கான சுற்று நிருபத்துக்கு அமைய, கல்விசார்ந்த துறையினரும் செயற்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பான கடிதங்களை உரிய தரப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

இதற்கு மேலதிகமாக அனைத்து மாகாண கல்வி திணைக்களங்கள், வலைய மற்றும் கோட்ட கல்வி அதிகாரிகளும் தங்களது பணிகளுக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...