(அர்க்கம் அன்ஸார்-களுத்துறை)
நாட்டில் கொவிட் நான்காவது அலையின் வேகம் பாரதூரமாக இருப்பது நாம் அறிந்ததே.இந் நிலையில் களுத்துறை தெற்கில் கொவிட் தொற்றாளர்களும்,மரண வீதமும் அதிகரித்துள்ள நிலையில் களுத்துறை, (தெற்கு) வைத்தியர்கள் உட்பட ஏனைய துறைசார்ந்தவர்கள் இணைந்து கொவிட் 19 டாஸ்க் போர்ஸ் (Task force) எனும் பெயரில் கொவிட் ஒழிப்பு செயலணி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.இந்த வகையில் நேற்று (28) KMS foundation இனால் கொவிட் 19 TASK FORCE செயலணிக்கு 150 வைத்திய பாதுகாப்பு ஆடைகள் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது.
இந் நன்கொடைகளை KMS அமைப்பினர், கொவிட் 19 TASK FORCE அமைப்பின் சிரேஷ்ட வைத்தியர்களான, வைத்தியர் முன்பாய்ஸ் , வைத்தியர் ஆமில் ஜொவ்ஸி மற்றும் வைத்தியர் zஸுரி ஆகியோரிடம் கையளித்தனர்.
இவ் வைபவத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டார்கள்.இந் நன்கொடையை வழங்குவதற்குப் பங்காற்றிய களுத்துறை மரிக்கார் வீதியை சேர்ந்த, வெளிநாடுகளில் தொழில் புரியும் நலன் விரும்பிகள் மற்றும் களுத்துறை மரிக்கார் வீதி சமூக அங்கத்தவர்கள் மற்றும் அனைத்து நலன் விரும்பிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக KMS foundation இன் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.