நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று (13)நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன.இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று(14) தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாகாணங்களின் உள்ளக பஸ்களை பயன்படுத்தி மாகாணங்களுக்குள் குறித்த சேவைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக்கஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
ஆடை உற்பத்தி, சுற்றுலா, வங்கிச் சேவை, ஊடகத்துறை, விவசாயம் உட்பட அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு தமது அடையாள அட்டையைக் காண்பித்து அதன் மூலம் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற் கொள்வதற்கு முடியும்.
மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று தொடக்கம் கடுமையான முறையில் கண்காணித்து வருவதால் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.