கொவிட் தடுப்பூசி 3 ஆவது டோஸின் தேவை குறித்து ஒக்டோபரில் ஆராயப்படும்

Date:

நாட்டில் கொவிட் வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் தடுப்போசி ஒரு முக்கியமான பங்களிப்பை செய்கிறது எனவே,ஒக்டோபர் மாதத்தில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கெதிரான 3 ஆவது டோஸின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் அளவில் நாட்டின் சகலருக்கும் தடுப்பூசியை ஏற்றும் பணியை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த மாதம் இறுதியளவில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்குத் திட்டமிட்டிருக்கின்றது.

தற்சமயம் ஒரு கோடி 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் ஏற்றப்பட்டிருக்கின்றது. இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்திருப்பதாகவும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை!

இன்றையதினம் (25) நாட்டின் ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில...

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...