கொவிட் பரவலில் இலங்கை 15ஆவது இடத்தில் இருந்தும் அரசாங்கம் இன்னும் அதன் பாரதூரத்தை விளங்கவில்லை – எதிர்க் கட்சித் தலைவர்!

Date:

கொடூரமான கொரோனா பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் இருந்தாலும், மனச்சாட்சியற்ற ஆட்சியாளர்கள் அதை இன்னும் கவனத்திற் கொண்டு செயற்படவில்லை என எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை சுகாதார விஷேட நிபுணர்களின் தீர்க்கமான எச்சரிக்கைகளை புறக்கணித்துவிட்டு, அரசாங்கம் தனது பொறுப்பற்ற, தன்னிச்சையான அரசியல் நிகழ்ச்சி நிரலை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.

குறுகிய காலத்திற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதோடு,

அவர்களின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படாவிட்டால், இலங்கையில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 30,000 ஆக உயரும் என்று எதிர்வு கூறியுள்ளது.

இந்த பேரழிவின் தருணத்தில் இருக்கும் கடுமையான ஆபத்தை கருத்தில் கொண்டு, எமது வல்லுநர்கள் நாட்டை ஒரு குறுகிய காலத்திற்கு முடக்க வேண்டும் என்று எச்சரித்தனர், ஏனென்றால் மக்களின் வாழ்க்கை வேறு எதையும் விட எங்களுக்கு முக்கியம் என்றதாலாகும் என அவர் கூறினார்.

இருப்பினும், ஒரு நாளைக்கு இறப்புகளின் எண்ணிக்கை 150 ஐத் தாண்டினாலும்,இனம்காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டினாலும், அவர்கள் எடுக்கும் முடிவுகளிலிருந்து அரசாங்கம் சிறிதளவேனும் கருத்திற் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...