சரியான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடும் | அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Date:

டெல்டா கொரோனா வைரசினால் ஏற்படக்ககூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசிற்கு பின்னர் ஏற்பட்ட பிறழ்வுகள் மிகவும் ஆபத்தானவை என தெரிவித்துள்ள அவர் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான மாற்றமடைந்த வகைகள் உருவாகலாம் என கருதவேண்டும் என தெரிவித்துள்ளார்.
 வைரஸ்களை விட அல்பா டெல்டாவினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என எச்சரித்துள்ள செனால் பெர்ணான்டோ இந்த வைரஸ்கள் வெளிப்படுத்தும் தடுப்பூசிகளிற்கான எதிர்பாற்றலையும் நாங்கள் கருத்தில்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இரண்டுடோஸ்களை செலுத்திக்கொண்ட பின்னரும் பாதி;க்கப்படுபவர்கள் உயிரிழப்பவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகும் காலத்தில் நாங்கள் இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது மிகவும் ஆபத்தான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய வலுவான கொரோனா வைரசினை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள செனால்பெர்ணான்டோ இதன் காரணமாக நாங்கள் நிலைமையை உணர்ந்து இன்னுமொரு பிறழ்வடைந்த வைரசினை எதிர்கொள்ள தயாராகவேண்டும்- இந்த பிறழ்வடைந்த வைரஸ் ஐந்தாவது அலைக்கு வித்திடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது டெல்டாவை விட ஆபத்தானதாக காணப்படக்கூடும் நாட்டினால் இதனை எதிர்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...