இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து, பணமாக மாற்றக்கூடிய S.D.R எனப்படும் விசேட மீள்செலுத்துதல் உரிமைகளின்படி,780 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், 300 மில்லியன் டொலர் கடனாக வழங்கவுள்ளது.
சீன அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படவுள்ள குறித்த கடன் தொகையானது, இன்று (31) நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இந்த நிதி கிடைப்பதன் மூலம், நாட்டின் அந்நிய செலாவணி சந்தையின் பணப்புழக்கமும், ஸ்திரத்தன்மையும் பரிமாற்ற விகிதத்தின் மூலம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.