சிலாபம் கொக்கவில தடுப்பூசி வழங்கும் மையத்தில் 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் (phizer) பயோஎன்டெக் (BioNTech) கொவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக சிறப்பு ஆலோசகர் வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ கூறியுள்ளார்.
நெருங்கிய நண்பர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் தடுப்பூசியை பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ளதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான மக்களுக்கு நேற்று தடுப்பூசி மையத்தில் ஃபைசர் தடுப்பூசியைப் பெற முடியாமல் போயுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலாபம் கொக்கவில அரச பாடசாலையின் தடுப்பூசி மையத்தில் நேற்று ஒரு மருத்துவரின் குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் சுகாதார அலுவலர் (MOH) துறையுடன் இணைந்த வைத்தியர் அருள்தேவி அருணாசலம் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.