சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (13)சீனாவின் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்தது.இதனால் ஹூபெய் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தப்படி உள்ளனர். ஹூபெய் மாகாணத்தில் நேற்றும், இன்றும் 503 மி.மீ. மழை பெய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் அந்த மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. 8 ஆயிரம் பேர் ஆபத்தான பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.