சீனி விலையை குறைக்க முடியாது – இறக்குமதியாளர் சங்கம்!

Date:

சீனியின் விலையை குறைக்க முடியாதென இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.சுமார் மூன்று வாரங்களுக்கு போதுமான சீனியே கையிருப்பில் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏதாவது ஒரு விதத்தில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடத்து நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.நாட்டில் சீனியின் விலை தொடர்பில் பாரிய கருத்தாடல் எழுந்துள்ளது.

ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ சீனியின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் சீனியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உற்பத்திகளுக்கான விலையை அதிகரிப்பது தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த விடயம் குறித்து கருத்துரைத்த சிற்றூண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஒரு கோப்பை தேநீரின் விலை 25 ரூபாவாக அதிகரிக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இது குறித்து இன்று(27) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.வருடாந்தம் தேவையான சீனியில் 20 சதவீத சிவப்பு சீனி நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது.ஏனையவை பிரேஸில் அல்லது இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...