ஜனாதிபதி – ரணில் விக்கிரமசிங்க இன்று அவசர சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தையின் இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ரணில், கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு , இன்று (17) இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.