தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேறு பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்-பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்!

Date:

தடுப்பூசி ஏற்றுவதற்காக, தமது பிரதேசத்தை தவிர்த்து வேறு பகுதிகளுக்கு செல்பவர்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார்.

மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்வது, தங்களது கிராம சேவகர் பிரிவிலுள்ள தடுப்பூசி ஏற்றல் மையமாகவோ அல்லது தடுப்பூசி ஏற்றல் மையத்திற்காக பெயரிடப்பட்டுள்ள கிராம சேவகர் பிரிவாகவோ இருக்க வேண்டும்.

எல்லா இடங்களிலும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் சென்றால், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முறையாக முன்னெடுக்க முடியாது.பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்காக, சிலர் தங்களது தொடர்புகளைப் பயன்படுத்தி, மேல் மாகாணத்தில் இருந்து புத்தளம் மாவட்டத்திற்கு செல்கின்றனர்.இதனைத் தவிர்க்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...