நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவருடன் நெருங்கிய தொடர்பு பேணியவராக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளார்.
மேலும் ஜனாதிபதி சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் சுதேவ, ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடனும் எஸ்.ஆர் ஆட்டிகல இணைந்து பணியாற்றி உள்ளார்.