பலாங்கொடை நகரில் உள்ள மருந்தகங்கள் மற்றும் ரயர் கடைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் நாளை (18) தொடக்கம் 22ஆம் திகதிவரை மூடப்படுவதாக பலாங்கொடை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் கலந்துரையாடல் இன்று (16) இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் நகரசபை உறுப்பினர் லால் கலப்பதிதி
தெரிவித்தார்.
இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதன்
ஊடாக நகருக்கு வருகைத்தரும் மக்களின்
எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியுமெனவும்,
இதனூடாக கொரோனா வைரஸ் பரவலைக்
கட்டுப்படுத்த முடியுமெனவும் நம்பிக்கை
வெளியிட்டார்.
அத்தோடு, வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.