பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, பாடசாலைகளை திறக்க முடியாது என கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார் .
மேலும், நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் அசாதாரய சூழ்நிலை காரணமாக, முன்னர் திட்டமிட்டவாறு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை திறக்க முடியாது என அவர் கூறியுள்ளார். கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த போதிலும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் சுகாதார தரப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும், சுகாதார தரப்பு அனுமதி வழங்கியவுடன் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என G.L.பீரிஸ் தெரிவிக்கின்றார்.