புதிய உலக சாதனை படைத்த பாகிஸ்தானின் அதிரடி வீரர் முஹம்மத் ரிஸ்வான்..!

Date:

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான T20 தொடர் இடம்பெற்றது.

இந்த போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரிஸ்வான் ஒரு உலக சாதனை படைத்துள்ளார்.

ஒரு ஆண்டில் டுவென்டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றுக் கொண்ட

வீரர் எனும் உலக சாதனை இன்று ரிஸ்வானால் படைக்கப்பட்டது.

மொகமட் ரிஸ்வான் இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 8 அரைச்சதம் அடங்கலாக 752 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

சராசரி 94 ஓட்டங்களாக காணப்படுகிறது, 140 க்கும் அதிகமாக Strike Rate உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் இந்த ஆண்டு நிறைவுக்கு வருவதற்கு 5 மாதங்கள் இருப்பதால் இன்னும் அதிகமான ஓட்டங்களை ரிஸ்வானால் குவிக்க முடியும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...