இலங்கையில் சமூக நல்லிணக்கம் வளரட்டும்; நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் சகவாழ்வு பணிகள் குறித்து தென்னிந்திய அரசியல் பிரமுகர் தமீமுன் அன்சாரி பெருமிதம்.
-தமீமுன் அன்சாரி
தலைவர் மனிதநேய ஜனநாயக் கட்சி
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு.
பல இன மக்கள் கலந்து வாழும் இலங்கையில் சமீப வருடங்களாக வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ்வதை தடுக்கும் ;தீவிர மத பிற்போக்குவாதிகளின் கருத்துகளை எல்லாம் தகர்த்து; மாறிவரும் புதிய உலகின் போக்குகளை புரிந்து கொண்டு; இது போன்ற ஒன்று கூடல்கள் அவசியம் ஆகிறது.
அவரவர் சமய நம்பிக்கைகளை இழக்காமல்; அதற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல்; இது போன்ற உரையாடல்களையும்- சந்திப்புகளையும் நிகழ்த்த வேண்டும்.
பழைய துன்பியல் நிகழ்வுகளையே பேசிக் கொண்டிருக்காமல்; அதனால் சமகால நிம்மதியை இழக்காமல்; எதிர்காலத்தை நோக்கி புதிய அணுகுமுறைகளோடு முன்னேற வேண்டும்.
மறப்போம்- மன்னிப்போம் என்ற மார்க்கத்தின் உயரிய கருத்தை பின்பற்றி; சமாதான வாழ்வுக்கான வழிமுறையை புதிய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
இதை முஸ்லிம் தலைவர்களும், அறிஞர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் பக்குவமாக புரிய வேண்டும்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் இது பற்றி அதிகமாக அக்கறை காட்டுவது நல்லது.